பக்கங்கள்

திங்கள், 4 ஜூலை, 2011

ஏமாற்றம் - சிறுகதை-

உண்மையை சொல்லனும்னா எனக்கு சமைக்கவே வராதுங்க…ஏன்னா இன்ஸ்டன் உணவுக்கு அடிமையாகி இருக்கோம்னா அதுல தப்பும் இல்லைங்க.புருஷன் வெளிநாட்டுல வேலை.நாம குழந்தையோட அங்கே ஷிப்ட் ஆயிட்டோம். அங்கு கலாச்சார மாற்றம் நம்மை அவ்வளவா பாதிக்கலைனாலும் அன்றாட பழக்க வழக்கவழக்கங்கள் நம்மலை அறியாமலே தாக்கத்துக்கு உற்படுவதை மறுக்கவே முடியலைங்க.

ஆனாலும் சமையல் என்றது உன்னதமான கலைங்க…நல்லா சமைக்கத்தெரிந்த கைக்கு முத்தம் கொடுக்குறதுல தப்பே இல்லீங்க.ஏன்னா….வாய்க்கு ருசியா சாப்பிட்டு ….மனமார வாழ்த்திய ….உள்ளங்கள் …அந்தக்காலங்கள் கிராமத்துலதான் போய்த்தேடனும்.அது ஒரு தனி அனுபவம்….அதுவும் தாய் நாட்டுக்குப்போய் பெத்தவங்க கையால சமைச்சதை முழுக்குடும்பமும் சேர்ந்து கேலியும் கிண்டலுமாய் சாப்பிட்ற சாப்பாடு இருக்கே….ம்..ம்…. எப்படிங்க மறக்க முடியும்.இருந்து நின்று இப்படியான சந்தோசங்களை அனுபவிக்க …டிக்கட் போட்டு செலவழிச்சி நாட்டுக்கு போய் வர வேண்டியிருக்கு.சில நேரம் தோணும் இப்படியான வெளிநாட்டு வாழ்க்கை தேவையான்னு.கணவனிடம் இதுபற்றி முறையிட்டால் போதும்…“ஏம்மா இதெல்லாம் யோசிக்குறே…நீ நல்லா சமைக்க கத்துக்கோ…சாப்பாட்டை போட்டு வெச்சி …சாப்பிடும் போது…ஸ்கைப்பை ஒன் பண்ணி முழுக்குடும்பத்தையும் ஒன்லைன் வரசொல்லிட்டால் போச்சி.“என்று முகத்தை சீரியசாக வெச்சிக்கொண்டு சொல்லுவாரு.எனக்கு சிரிப்புத்தான் வரும்.ஆனாலும் இது சந்தோசமாத்தான் இருக்கு இல்லையா?.

சமையல் சமையல் இதுதாங்க தினமும் நம் வாழ்க்கைல குறுக்கிட்ற செப்டர் சிலர் இருக்கிறாங்க சமைக்கவே தெரியலைன்னாலும் ரொம்ப ஓவரா பில்ட்டப் கொடுப்பாங்க.அவுங்க பில்ட்டப்பில் நாமும் சில நேரம் கவுந்திட்றோம்.அவுங்க சமைச்சதை சாப்பிடக்கிடைக்கும் போதுதான் ஐயோ… அம்மான்னு கதரத்தோணும்.

அப்படித்தாங்க என் தோழி ஒருத்தி.அவளுக்கு சமைக்கவே வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.ஆனால் அவளோ…. அதுதெரியும் இது தொரியும். சூப்பரா பண்ணுவேன். வெகேஷன் வந்தால் வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டுத்தான் போகனும்னு அடம் பிடிக்கவே… இந்த வெகேஷனுக்கு அவ வீட்லயே தங்கிட்டோம்

வன் வீக் வெகேஷன்.நிறைய வேலை .தோழியோடு இருந்து கதைக்க நேரம் இல்லைன்னாலும் தினமும் அவளுடன் ஒரு ஜோக் சொல்லி சிரிக்க நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்..அந்த கெப்பில் கூட… அவளே மெனக்கெட்டு சமைப்பதுபோல அவளின் சமையல் புராணம்தான்..பரவாயில்லை சமையல் சூப்பராத்தான் இருந்தது.எனக்குத்தான் ஒரே சந்தேகம் சந்தேகமா இருந்தச்சி.இதை கண்டுபிடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும் என்ற நிலைமைக்கு நான் வந்துட்டேன்.

அன்று அப்படித்தாங்க இரவு துாக்கமே வரலை.மின்விசிறிக்கும் தாக்குப்பிடிக்காத உஷ்ணம்.எடுத்து வைத்திருந்த தண்ணீரும் தீர்ந்திருக்கவே சமையல் அறைப்பக்கம் போக வேண்டிய நிர்ப்பந்தம்.தோழி என்னை சமையல் அறைப்பக்கம் வரவிட்டதே இல்லை.அதனால எதெது எங்கெங்க இருக்குன்னே தெரியலை ஒரு கோப்பையை தேடுவதற்குள் பலமான அதிர்ச்சிகள் பல.
அங்கே…..அடுக்கிவைக்கப்பட்டதெல்லாமே…இன்ஸ்டன் உணவுகள்
அதாவது….மசாலா எல்லாம் போட்டு டின்னில் அடச்சி விப்பாங்களே….லேசா சூடு பண்ணினாலே போதும். வீடு கம கமன்னு மணந்து சுவையும் துாள்கிளப்பிடும்.ஆனால் ஆரோக்கியம்தான் கேள்விக்குறி.இந்த இன்ஸ்டன் உணவுகளின் தாக்கம் மேலைத்தேய நாடுகளில்தான் அதிகம்.அவர்களின் இயந்திர வாழ்க்கைக்கு அவை பொருந்தும்.
இதுதான்  தோழியின் சமையல் கலை மர்மம்.என்கிற ஆச்சர்யம் அடங்கவேஇல்லை.கைப்பக்குவத்தோடு சாப்பிட வந்த எனக்கு இந்த ஏமாற்றத்தைத்தான் தாங்க முடியவில்லை.

          - யாவும் கற்பனை-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக