பக்கங்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

சின்ன வயசு நோன்பு

சங்கைமிகு புனித ரமழான் மாதமும் வந்துவிட்டது.நோன்புகளையும் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
பாவமென்று உள்ளம் நினைக்கிறதிலிருந்து விலகியே நடக்கிறோம்.ஓய்வாக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கிறோம்.நன்மையான காரியங்களை பார்த்துப்பார்த்து செய்கிறோம்.

.இதெப்படி….

நாம் பக்குவப்பட்டுவிட்டோம்.கொஞ்சம் பகுத்தறியக் கற்றுக்கொண்டுவிட்டோம்…
ஆனால்….

ஒன்றுமறியா பிஞ்சுப்பருவத்தில்…செய்த சேட்டைகள் என்ன…
குறும்புகள்தான் என்ன…!!!
இப்போது அவற்றை நினைவுகளால் மாத்திரமே அலசிப்பார்க்க முடிகிறது..

இந்த நோன்பு மாதம் வந்தாலே எவ்வளவு சந்தோசம்.
பாடசாலைக்கு விடுமுறை தந்துவிடுவார்கள்..காலையில் சீக்கிரமா எழுந்திருக்கவேண்டிய கட்டாயமே இல்லை.ஆனாலும் சீக்கிரமாவே எழுந்து தோழிகள் வீட்டுக்குப் போய் விளையாட ஆள் சேரப்போம். பொதுவாக நோன்பு காலத்தில் எல்லா விளையாட்டும் விளையாட மாட்டோம்.பெண்கள் என்றபடியால்… பசிதாகம் மறந்து குஞ்சூடு (விளையாட்டு வீடு) தான் கட்டிவிளையாடுவோம்.
மணி மூன்றை தாண்டும் போது இருப்புக்கொள்ளாது…
“கஞ்சி எடுக்கப்போக வேண்டுமே… ” என்று உடனே கிளம்பிடுவோம்.
உம்மாவின் துப்பட்டாவை எடுத்து தலையை மூடிக்கொண்டு…கையில் மூடிபோட்ட சின்ன  வாளி களை எடுத்துக்கொண்டு தங்கை தம்பி வீட்டுப் பக்கத்திலுள்ள தோழிகளோடு கஞ்சி எடுப்பதற்காக பள்ளி வாசல்களுக்குச் செல்வோம்.

இப்பொழுதுதான் பள்ளிவாசல்கள் தெருவுக்குத் தெரு இருக்கிறதே…முன்பு அவ்வாரில்லை.முழு ஊருக்கும் 2 அல்லது 3 பள்ளிவாசல்கள் தான்.
அதனால் கஞ்சி எடுக்கச் செல்லுவதற்கு கொஞ்சம் தூரம் நடக்கவேண்டி ஏற்படுகிறது.அந்தத் தூரத்தைக்கூட குதூகலமாகவே கடப்போம்.
பள்ளியின் பின்பகுதகளில்தான் பொதுவாக கஞ்சி காய்ப்பார்கள்.அஸர் தொழுகை (மாலை நேர இறைவணக்கம்) முடிந்ததும் தான் கஞ்சைப் பகிர்வார்கள்.
அதுவறை…

முட்டிமோதி வரிசையில் இடம் பிடிப்பதும்…பிடித்த இடத்தில் பக்கட்டுகளை வைத்துவிட்டு ஓடிப்பிடித்து விளையாடுவதுமாக இருப்போம்.இதெல்லாம் பள்ளித்தோடத்தில்தான் நடக்கும்.

கஞ்சி பகிர்ந்ததும்…

வீடுதிரும்பும் வழியில் காணப்படும் அடர்ந்த. மரங்கள் செரிந்த சின்னச்சின்ன காடுகள் சந்திக்கடநேரிடும்.
அங்கு காணப்படும் பழங்களைப் பறிப்போம்.
நாவல் பழம்….மாம்பழம்… புளியம்பழம்…முந்திரிகைப்பழம்…விழாம் பழம்…இன்னும் நிறையப்பழம் கிடைக்கும்.
கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு வீடுபோய்ச்சேர்வோம்.
இவைகள் நமது வீட்டுத்தோட்டங்களில் கிடைக்காமலில்லை.
அப்படி இருந்தும்…தோழிகளோடு இணைந்து திருட்டுப்பபழம் பறிப்பதில் எவ்வளவு ஆனந்தம்.
கொண்டுபோன பழங்களை பாடசாலைப் பையினுள் தான் பத்திரப்படுத்துவோம்.
அடிக்கடி பையைத் திறந்து முகர்ந்து வாசனை பார்ப்போம்.அப்பொழுதெல்லாம் நோன்பின் மகிமை…சட்டதிட்டங்கள்…இதெல்லாம் புரியாத வயசில்லையா…??? அதுதான்…எப்படா நோன்பு திரப்போம் என்று காத்துக்கிடப்போம்…
        நோன்பு திரக்க இருக்கும் கடைசி ஓரிரு மணித்தியாலங்களும் நகரவே நகராததுபோல் இருக்கும்.
        அந்த நேரத்தில்தான் நோன்புக்கடை வைப்போம்.
வீட்டு முற்றத்தில்…பாதையோரத்தில்…
சின்ன மேசைகளை வைத்து……அதில்…பழங்கள்…இனிப்புப் பண்டங்கள்….முறுக்குவகை…இவற்றைத்தான் சின்னஞ்சிறிய நாங்கள் அந்நேரம் விற்பனைக்குவைப்போம்.விலை குறைவு என்பதால் பெரியோர்களும் வந்து வாங்குவதுண்டு….
அதெல்லாம் அத்துனை சந்தோசங்கள் தெரியுமா…???
           நோன்புதிறக்க அரைமணிநேரத்துக்கு முன்பே மேசைக்குப் பக்கத்தில் அமர்ந்துகொள்வோம்.கஞ்சி…பேரீத்தம் பழம்…இன்னும் சுவைமிகு பண்டங்கள் மேசையை அழங்கரித்திருக்கும்…
அந்த அரை மணித்தியாலத்துள் ஆயிரம் தடவை கேட்டிருப்போம் “எப்போதும்மா… நோம்பு திரக்க அதான் ஒலிக்கும்”
           நோன்பு திறந்த பின் எல்லோரும் குர்ஆன் ஓதுவாங்க…தொழுவாங்க…
நாங்க என்னடான்னா சேத்துவெச்ச தீண்பண்டங்களை திண்றுதீர்ப்திலேயே குறியாய் இருப்போம்.வீட்டில் திட்டும் சரமாரியாக்கிட்டும். ” எப்படித்தான் இப்படி இதெல்லாம் தின்னுதுகளோ..?வயித்துவலிகயைத் தேடிக்காம இருந்தா சரி…”
அப்படி எங்களுக்கு வலி வந்திடுமா என்ன??
       ஆறு முப்பதுக்கெல்லாம் நோன்பு திறந்திடுவோம்..எட்டு  எட்டரைக்கெல்லாம்..பள்ளிக்கு தொழுவதற்கு சென்றிடுவோம்.நோன்பு காலத்தில் மட்டும் பெண்களுக்குத் தராவீஹ் ( ரமழானில் மட்டும் தொழும் பொழுகை ) தொழுவதற்கென்று பள்ளியின் ஒரு பகுதி புடவையால் மறைக்கப்பட்டிருக்கும். சிலரின்வீடுகளிளும் தொழுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
பெரியோர்க்கு முன் நாங்கள்தன் நேரத்துக்கு முதல் போய் ஆஜராகிடுவோம்….ஆனாலும் பின்வரிசையில்தான் அமர்வோம்..தோழிகளுடன் சேர்ந்து..வழ வழன்று கதைப்போம் சிரிப்போம்….ரகசியமாகத்தான் கதைக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம்.
அதையும் தான்டி சத்தம் கேற்கும் பட்சத்தில் ஏச்சும் வாங்குவோம். இதெல்லாம் தப்பு …பாவமான காரியமென்று தெரியவும் தெரியாது…சொல்லித்தந்தாலும் புரிந்துகொள்ளவும் மாட்டோமே….
வுழூ ( உடல் சுத்தி ) செய்யவென்று ஒரே ஒரே வெளியே போவோம்.இருட்டில்கூட நண்பிகளோடு அவர்கள் வீட்டுக்குப் போவோம்.என்னதான் செய்தாலும் தொழுகை முடியும் தருவாயில் வந்து அமைதியாய் பெரியவர்களுடன் சேர்ந்துகொள்வோம்…நல்ல பிள்ளையாய் வீடுவந்து சாப்பிட்டுத்தூங்கிவிடுவோம்…..

      இந்தச் சேட்டைகளெல்லாம் செய்தது ஒரு காலம்…ஒரு குறிப்பட்ட வயது வரைதான்…
அதோடு எல்லாம் போய்விட்டது…முடிந்துவிட்டது…அந்த சூழல் கூட இப்போது இல்லையென்றாகிவிட்டது…இப்போதுள்ள பிள்ளைகள் கூட இவற்றில் சிலவற்றையாவது அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை…காலத்தின் ஓட்டம் இன்று…அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டது…இந்த அனுபவங்கள் இனி…ஏட்டில் பதிந்தவையாக மட்டுமே இருக்கும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக